Tuesday 15 May 2012

மங்காத கவிதை


காதல் மன்னன் கைவீசி வாறான்
காத்திருந்த கண்களுக்கு விருந்தளிக்கப் போறான்
ஐந்தாறு சறுக்கல்கள் கண்டதால்
ஆட்டத்தை நிறுத்த முடியாது
ஐந்தாறு இலைகள் உதிர்ந்ததால்
ஆலமரத்தை அசைக்க முடியாது

ஆயிரம்பேர் எதிர்த்தாலும்
எடுத்த முடிவில் நிலைத்து நிற்பான்
ஆயிரங்கள் அள்ளி அள்ளி கொடுத்தாலும்
வளைந்து கொடுக்காமல் நிமிர்ந்து நிற்பான்

வெள்ளை சட்டைகளிடம் தஞ்சம் புகரும்
வேடிக்கை நிலைமை சிலருக்கு
விளம்பரம் தேடி பம்பரமாய் சுத்தும்
வாடிக்கை நிலைமை சிலருக்கு
விளம்பரமும் இன்றி வெல்லைசட்டையும் இன்றி
ஆதரவு தேடி வரும் இவனுக்கு


எடுத்துவைக்கும் அடுத்த அடி
என்ன என்று பாடட்டா
ராஜா ராணி ஜாக்கி இணையும்
உள்ளே வெளியே மங்காத்தா

மானாட்டம் மயிலாட்டம் அனைத்தையும் மிஞ்சி
சூதாட்டம் விறுவிறுப்பை அள்ளும்
குத்தாட்டம் போடும் கூத்தாடிகளுக்கு
மங்காத்தா பதில் சொல்லும்